ஆஸ்திரேலியாவை சென்றடைந்தனர் ஐபிஎல் குழாத்தினர்…!

இந்தியாவில் இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்ற ஆஸ்திரேலிய நாட்டவர்கள் பாதுகாப்பாக இன்று அதிகாலை சிட்னியை சென்றடைந்ததாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இடை நிறுத்தப்பட்டாலும் இரண்டு வாரங்கள் கடந்து இன்றைய நாளிலேயே அவுஸ்திரேலிய குழாத்தினர் அவுஸ்ரேலியாவை அடைந்துள்ளனர்.

ஐபிஎல்லின போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் அவர்கள் தாயகம் செல்வதற்கு தடையாக அவருடைய பயணத்தடையே பிரதானமான காரணமாக இருந்தது.

ஆஸ்திரேலியாவில் இந்திய விமானங்கள் உள் நுழைவதற்கு மே மாதம் 15ஆம் திகதி வரைக்கும் அந்த அரசு தடை விதித்திருந்தது, இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 வாரத்துக்கு அதிகமாக மாலைதீவில் தங்கியிருந்தனர்.

மாலைதீவில் தங்கியிருந்து ,அவுஸ்திரேலிய வீரர்கள் இன்று அவுஸ்திரேலியாவின் அடைந்திருக்கின்றனர் . மொத்தம் 38 பேர் இவ்வாறு சென்றுசேர்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.

டேவிட் வார்னர், ஸ்மித் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியாளர்கள் குழாத்தில் இருந்த பொன்டிங் அதைப்போன்று வர்ணனையாளர்கள் என 38 பேர் இந்த குழுவில் உள்ளடங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹஸ்ஸி இந்த குழாமில் சென்றடைய வில்லை என்றும் தெரியவருகிறது. இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட  நிலையிலேயே இவரின் பயணம் மட்டும் தாமதமாகிறது.