ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டில்ஷான்..!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தில்ஷானுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை கிடைப்பது குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரரும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவருமான திலகரத்ன டில்ஷான் பிரசன்னமாகியிருந்தமையால் இந்த பிரஜாவுரிமை வழங்கும் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தில்ஷானின் மகள் ரெசாந்தியையும் குறிப்பிட்டு, அவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

புதிய ஆஸ்திரேலிய மற்றும் உள்ளூர்வாசி என்ற முறையில், உள்ளூர் அணியில் சேரவும், சமூகத்துடன் தனது திறமைகளை பகிர்ந்து கொள்ளவும் டில்ஷான் முடிவு செய்வார் என்றும் அவர் நம்புகிறார்.