இங்கிலாந்திடம் மண்டியிட்டது இந்தியா- சென்னையில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி.

இங்கிலாந்திடம் மண்டியிட்டது இந்தியா- சென்னையில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியின் 5ம் நாளான இன்று  420 எனும் வெற்றி இலக்குடன் ஆடியன் இந்திய அணி 192 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து, அணித்தலைவர் ஜோ ரூட்டின் இரட்டை சதத்தின் துணையுடன் 578 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டது .

இந்திய பந்து வீச்சில் பூம்ரா , அஷ்வின் ஆகியோர் 3 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா, நதீம் ஆகியோர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த இந்தியா ஆரம்ப வீரர்கள் ரோகித் சர்மா ,கில் ஆகியாரை விரைவாக இழந்தது.

அதன்பின்னர் பொறுப்போடு ஆட வேண்டிய நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த கோலி மற்றும் ரஹானே ஆகியோரும் விரைவாகவே வீழ்த்தப்பட்ட நிலையில், இந்தியா ஒரு கட்டத்தில 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை என்கின்ற தடுமாற்றமான நிலையில் இருந்தது .

ஆயினும் விக்கட் காப்பாளர் ரிஷாப் பாண்ட் 91 ஓட்டங்களையும் புஜாரா நிதானமாக 73 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர், இவர்களும் வீழ்த்தப்பட்டாலும் ஆயினும் சுந்தர் அபாரமாக ஆடி 85 ஓட்டங்களை ஆட்டம் இழக்காது பெற்றுக் கொடுத்தார்.

முதல் இன்னிங்சில் போராடிய இந்தியா 337 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது, 241 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து 2 ம் இன்னிங்சில் 178 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.

அஷ்வின் 6 விக்கெட்களையும், நதீம் 2 விக்கெட்களையும் பூம்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

420 எனும் வெற்றி இலக்கோடு களம் புகுந்த இந்தியாவுக்கு ஜாக் லீச் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் வெற்றிக்கனவை தகர்த்து 227 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியை தேடிக் கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய மண்ணில் இளம் வீரர்களைக் கொண்டு ரஹானே தலைமையில் சாதித்த இந்தியா மீண்டும் கோஹ்லி தலைமையில் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 வைத்து டெஸ்ட் போட்டி 13 ம் திகதி இதே சென்னை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.ஆட்ட நாயகன் விருது அணித்தலைவர் ஜோ ரூட்டுக்கு கிடைத்தது.

*ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து இறுதி ௧௧ டெஸ்ட்டில் 9 வெற்றிகளை பெற்றுள்ளதோடு தோல்விகள் எதனையும் தழுவவில்லை.

*கோஹ்லி தலைமையில் இந்தியா இறுதி 4 டெஸ்ட்டிலும் தோல்வியை தழுவியுள்ளது.

*உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்தை பின்தள்ளி இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேற, இந்தியா 4 வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.