இங்கிலாந்தின் இன்னுமொரு சகலதுறை வீரர் உலக கிண்ண அணியிலிருந்து நீக்கம்..!
இந்தமாதம் ஆரம்பிக்கவுள்ள T20 உலக கிண்ண போட்டிகளுக்கான இங்கிலாந்து உலக கிண்ண அணியிலிருந்து இன்னுமொரு சகலதுறை வீரர் உபாதையால் நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக IPL போட்டிகளில் விளையாடி வரும் இங்கிலாந்தின் சகலதுறை வீரரான சாம் கர்ரான் உபாதையால் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் களம் காணும் இங்கிலாந்து அணிக்கு கர்ரான் உபாதைக்கு உள்ளமை இன்னும் சிக்கலை தோற்றுவிக்கும் என்றே கருதப்படுகின்றது.
ஒயின் மோர்கன் தலைமையிலான அணிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் நிலை ஏற்பட்டு வருகின்றது.