இங்கிலாந்தின் உலகக் கிண்ண வெற்றி நாயகன்- அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் தேர்வு ..!
இங்கிலாந்து அணிக்கு 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணம் கிடைப்பதற்கு முக்கிய காரணகர்த்தாக்களுள் ஒருவராக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் லியாம் பிளங்கெட் அமெரிக்க தேசிய அணியில் இணையும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
இதன் ஓர் அங்கமாக அமெரிக்காவில் இடம்பைறும் மேஜர் லீக் போட்டிகளில் விளையாட பிளங்கட் ஒப்பந்தமாகியுள்ளார்.
2019ஆம் ஆண்டு மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்ற போது, அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகபிளங்கட் திகழ்ந்தார்.
உலகக்கிண்ண வெற்றிகளுக்குப் பின்னர் அவருக்கான வாய்ப்புகளை இங்கிலாந்து தேர்வாளர்கள் நிராகரித்து வந்துள்ளனர்.
இதனடிப்படையில் வாய்ப்புகளுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த பிளங்கட் இந்த முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
36 வயதான பிளாங்கட் இங்கிலாந்து அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளிலும் 89 ஒருநாள் போட்டிகளிலும், 22 T29 போட்டிகளில் விளையாடியுள்ளார்.