இங்கிலாந்தின் கதையை 3 நாட்களில் முடித்துக்கட்டிய தென் ஆபிரிக்கா…!

இங்கிலாந்தின் கதையை 3 நாட்களில் முடித்துக்கட்டிய தென் ஆபிரிக்கா…!

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 165 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோது, ​​மூன்றாவது நாளான நேற்று ஆட்டம் தொடங்கும் போது தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பின்னர் காலையில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தை விடவும் 161 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடத் திரும்பிய இங்கிலாந்து அணியின் எந்தவொரு பேட்ஸ்மேன்களும் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை, இங்கிலாந்தின் முதல் 6 விக்கெட்டுகள் 86 ரன்களுக்கு சரிந்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் போர்டு 7வது விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் சேர்த்தனர்.

அதன்படி, இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 149 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதுடன் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ககிசோ ரபாடா ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

இங்கிலாந்து– முதல் இன்னிங்ஸ் 165-10
ஒல்லி போப் 73(102), பென் ஸ்டோக்ஸ் 20(30)
ககிசோ ரபாடா 52/5 என்ரிக் நோக்கியா 63/3

தென்னாப்பிரிக்கா- முதல் இன்னிங்ஸ் 326-10
சரேல் ஹெர்வி 73(146), மார்கோ ஜான்சென் 48(79), டீன் எல்கர் 47(81)
ஸ்டூவர்ட் ப்ரோட் 71/3, பென் ஸ்டோக்ஸ் 71/3

இங்கிலாந்து -இரண்டாவது இன்னிங்ஸ் 149-10
ஸ்டூவர்ட் ப்ரோட் 35(29), அலெக்ஸ் லீஸ் 35(83)
ஹென்ரிக் நொக்கியா 47/3, மார்கோ ஜான்சென் 13/2