இங்கிலாந்தின் வூட் விலகல் ,சாஹிப் மொகமட் அணியில் சேர்க்கப் படும் வாய்ப்பு ..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்திருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வூட் தோள்பட்டை உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணத்தால் குழாமில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாஹிப் மொஹமட் இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் மேற்கொள்ளலாம் எனவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஏற்கனவே முன்னணி வீரர்கள் பலர் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் இப்போது வூட்டின் உபாதை இங்கிலாந்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.