இங்கிலாந்தில் அசத்தலாக ஆரம்பித்த அஸ்வின்- வீடியோ இணைப்பு ..!
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸவின், கழக மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் இங்கிலாந்தின் பிரபலமான கழகமான சர்ரே பிராந்திய கழகத்துக்காக அஸ்வின் இன்றைய நாளில் தன்னுடைய கழக அறிமுகத்தை மேற்கொண்டார்.
இதனடிப்படையில் சமசெட் அணிக்கெதிரான போட்டியில் பந்து வீசிய அஸ்வின் மிகச்சிறப்பாக முறையில் விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளமை கவனிக்கத்தக்கது.
இது மாத்திரமல்லாமல் இங்கிலாந்தின் கழக மட்டப் போட்டிகளில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் போட்டியில் முதல் ஓவரை வீசிய நிகழ்வும் அஸ்வின் இன்று வீசிய ஓவர் மூலமாக நிகழ்ந்தது என்பதும் கவனிக்கத் தக்கது.
எது எவ்வாறாயினும் வெளிநாடுகளில் விக்கட்டுக்கள் வீழ்த்துவதில்லை எனும் குற்றச்சாட்டை தகர்த்து கழக மட்டப் போட்டிகளில் பெறும் அனுபவத்தின் மூலமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் கலக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
? Don't leave those.
WATCH LIVE ⏩ https://t.co/0WriMzkGx9 pic.twitter.com/nbJ6zvMyyx
— Surrey Cricket (@surreycricket) July 11, 2021