இங்கிலாந்துக்கான கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டி வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இன்று இலங்கை அணி தங்களுக்கிடையில் ஒரு பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடியது.
குசல் மென்டிஸ் தலைமையில் ஒரு அணியும் குசல் பெரேரா தலைமையில் ஒரு அணியுமாக இன்றைய போட்டியில் விளையாடினர்.
இரண்டு அணிகளும் சரிசமமாக முட்டி மோதி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, இரு அணிகளும் தலா 250 ஓட்டங்களையே பெற்றுக் கொண்ட நிலையில் போட்டி சமநிலையில் நிறைவு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வீரர்கள் இவ்வாறு சரிக்கு சமமாக மோதியிருக்கின்றமை ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.
Score விபரம் ???
குசல் மெண்டிஸ் அணி– 250/9 (50)
ரமேஷ் மெண்டிஸ் 71(89),
இசுரு உதான 44(57),
ஒசாத பெர்னான்டோ 39(34),
அகில தனஞ்சய 3/28,
சமிக கருணாரட்ன 3/38
குசல் பெரேரா அணி– 250/9 (50)
அவிஷ்க பெர்னான்டோ 64(71),
தசுன் சானக்க 44(54),
அசித்த பெர்னான்டோ 3/43
Result-Match Tie