இங்கிலாந்தில் விளையாடப்போகும் இலங்கையின் திமுத் கருணாரத்ன…!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, இங்கிலாந்தின் பிரபல கழகமான யோர்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, மே மாதம் இலங்கை கிரிக்கெட் அணியுடன் பங்களாதேஷ் செல்வதற்கு முன்னர் திமுத் கருணாரத்ன யார்க்ஷயர் அணிக்காக நான்கு கவுண்டி போட்டிகளில் விளையாட உள்ளார்.

திமுத் ஏப்ரல் 10 ஆம் தேதி இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.