இங்கிலாந்தில் வெற்றி வாகை சூடிய திருமலை இந்துக் கல்லூரி கிரிக்கெட் அணி..!
கிழக்கிலங்கையின் புகழ்பூத்த பாடசாலையான திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் வெற்றி வாகை சூடி ஜொலித்தருகிறது .
கிழக்கிலங்கையின் மிகப்பெரும் பழம்பெரும் கல்லூரியான திருக்கோணமலை இராம கிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ‘பொன் அணிகளின் போர்’ Battle of the Golds என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் ஆட்டம் இடம்பெற்று வருகிறது.
இதனுடைய ஓர் அங்கமாக இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் இந்துவின் மைந்தர்கள், இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சமூகத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக இரு கல்லூரிகளின் பழைய மாணவர்களுக்கிடையில் இதே மாதிரியான கிரிக்கட் தொடரை நடத்தி வருகின்றனர் .
அண்மையில் இங்கிலாந்தின் பிரபல மைதானம் ஒன்றில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் அணியினருக்கும் மட்டு, சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் அணிகளுக்கும் இடையிலான Battle of the Golds போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்துக்கல்லூரியின் கிரிக்கெட் அணியினர் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் அணியினர் ஒரு ஓட்டத்தால் போட்டியில் தோல்வியைத் தழுவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
3-வது Battle of the Golds ஆட்டத்தில் விறுவிறுப்பான கட்டத்தில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் அணியினர் வெற்றி வாகை சூடியமை கவனிக்கத்தக்கது.
இந்த போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விருதை இந்துக் கல்லூரியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் சக்தி பிரணவன் வென்றிருக்கிறார், சிறந்த பந்துவீச்சாளரான விருது மிரேஸ்க்கு கிடைத்திருக்கிறது.
?ஆட்ட நாயகன்:- மிரேஷ் (இந்துக் கல்லூரி)
?சிறந்த பேட்ஸ்மேன்:- சக்தி பிரணவன் (இந்து கல்லூரி)
⚾ சிறந்த பந்துவீச்சாளர்:- மிரேஷ் ( இந்துக் கல்லூரி)
?⚾சிறந்த ஆல் ரவுண்டர்:- ஷாருதன் (சிவானந்தா)
தணியாத கிரிக்கெட் தாகத்தோடு இஙரகிலாந்தில் பயணப்படும் திருமலை, இந்துக்கல்லூரி கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்துக்கள் .
இந்துக்கல்லூரி பழைய மாணவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நீண்ட காலமாக கிரிக்கெட்டில் தடம்பதித்து வருகின்றமை பாராட்டத்தக்கது, இந்துவின் மைந்தர்களை வாழ்த்துவோம்.