இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது .
அகமதாபாத்தில் நிறைவுக்கு வந்து இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆரம்பத்தில் மிகப்பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டது .
3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்த இந்திய அணி 7 விக்கட்களை இழந்து 124 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றியை தனதாக்கியது .
இன்றைய போட்டியில் விராட் கோலி ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தமை முக்கியமானது, 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-0 என்கின்ற அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றது.