இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி விபரம் அறிவிப்பு..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருந்த சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் ஆகியோர் உபாதை காரணமாக அண்மையில் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிதாக இலங்கை தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ப்ரித்வி ஷா , சூரியகுமார் யாதவ் ஆகியோர் புதிதாக டெஸ்ட் அணிக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

அணி விபரம் .

ரோஹித் சர்மா, மாயங் அகர்வால், புஜாரா, விராட் கோஹ்லி (தலைவர்), அஜிங்க்யா ரஹானே (உதவி தலைவர்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பான்ட் (wicket-keeper), R. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஜஸ்பிரிட் பூம்ரா, இஷாந்த் சர்மா, மொஹமட் சாமி, மொஹமட் சிராஜ், ஷர்த்துல் தாகூர், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், விருத்திமன் சஹா (wicket-keeper), அபிமன்யு ஈஸ்வரன், ப்ரித்வி ஷா , சூரியகுமார் யாதவ்