இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இணைவாரா -தகவல் வெளியானது

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற பெரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .

இந்த நிலையில் அஸ்வினுக்கு துணையாக அணியில் இணைத்துக் கொண்ட நதீம் மற்றும் சுந்தர் ஆகியோர் பெருமளவில் சோபிக்க தவறிய நிலையில் ஜடேஜாவின் இடம் மிகப்பெரும் வெற்றிடமாக இருக்கும் நிலையில், அகமதாபாத்தில் இடம்பெறும் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா இடம்பெறக் கூடும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன .

ஆயினும் ஜடேஜா அறுதி 2 டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெறமாட்டார் என்று தெரியவருகிறது .

2016ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இந்தியாவில் இடம்பெற்ற போது 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்று இந்தியா வென்றது.

இந்தியா தொடரை கைப்பற்றுவதற்கு ஜடேஜா காரணமாக இருந்தார். துடுப்பாட்டத்தில் 226 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

எவ்வாறாயினும் ஜடேஜா இல்லாதது இந்தியாவிற்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.