இங்கிலாந்துக்கு சாட்டையடி கொடுத்த கெவின் பீட்டர்சன்…!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அஹமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் எல்லோரும் பலவிதமான கதைகளை கூறி வருகின்றனர்.

இது தொடர்பில் இங்கிலாந்தின் முன்னாள் தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான கெவின் பீட்டர்சன் ஒரு சாட்டையடி கருத்தை முன்வைத்துள்ளார்.

எதிர்மறையான கருத்துக்கள், தோல்வியுற்ற அணுகுமுறைக் கருத்துக்களுக்கு பதிலாக, ஐ.சி.சி.யைக் குறை கூறுவதற்கு பதிலாக, ஆடுகளத்தை குறை கூறுவது,அத்தோடு இந்தியாவின் புள்ளிகளை குறைக்க முயற்சிப்பது, அனைத்து முட்டாள்தனங்களையும் கைவிடுங்கள்.

தொடரில் இதுவரை இங்கிலாந்து நேராக வந்த பந்துகளுக்கே (Straight Balls) 21 விக்கெட்டுக்களை பறிகொடுத்துள்ளது, ஆகவே அதற்கு விடை தேடுவதை விடுத்து மாற்றான கதைகளையும் கருத்துக் பகிர்வுகளையும் கைவிட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.