இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா -ஜோ ரூட்டை ஆட்டம் இழக்கச் செய்யும் மாயாஜாலத்தை மறைத்து வைத்திருந்தது ஏன்?

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா -ஜோ ரூட்டை ஆட்டம் இழக்கச் செய்யும் மாயாஜாலத்தை மறைத்து வைத்திருந்தது ஏன்?

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக இந்த நான்காவது டெஸ்ட் போட்டி பார்க்கப்படுகிறது .

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, தாஹூர் 56 ஓட்டங்களையும், விராட் கோலி 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மத்திய வீரர்கள் வழமைபோன்று ஏமாற்றம் அளித்தனர், பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணயின் ஆரம்ப வீரர்கள் இருவரையும் ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார்.

6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள்  என்கின்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, ஜோ ரூட் மற்றும்  மாலன் ஆகியோர் மிக அற்புதமான இணைப்பாட்டம் புரிந்தனர்.

 

இந்த நிலையில் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் அடித்து ஓட்ட இயந்திரமாக மாறி இருக்கும் ஜோ ரூட்டை ஆட்டம் இழக்கச் செய்யும் மாயாஜாலத்தை ஏன் இந்தியா இதுவரை மறைத்து வைத்திருந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இந்த தொடரில் முதல் தடவையாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட  உமேஷ் யாதவ் அற்புதமான இன்ஸ்விங் மூலமாக ரூட் ஆட்டமிழந்தார்.

 

முதல் நாளில் இங்கிலாந்து 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது, 2021 ல் இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்டு ஓட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு வீதமான ஓட்டு எண்ணிக்கையை (35%) ரூட்டே பெற்றுக் கொடுத்திருக்கிறார் .

ஆக மொத்தத்தில் ரூட்டின் ஆட்டமிழப்பு இந்தியாவை இந்த போட்டியில் வெற்றியை நோக்கி பயணிக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.