இங்கிலாந்துக்கு ராசியில்லாத லீட்ஸ் மைதானம்- இதுவரையான சாதனைகள் சொல்லும் செய்தி என்ன ?
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை லீட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த மைதானம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அவ்வளவு சாதகமான மைதானமாக கடந்தகால புள்ளி விபரங்கள் மூலமாக அறிய முடியவில்லை.
லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி இதுவரைக்கும் 34 டெஸ்ட் வெற்றிகளையும், 35 தோல்விகளையும் சந்தித்திருக்கிறது.
மொத்தம் 77 டெஸ்ட் ஆட்டங்களில் இந்த லீட்ஸ் மைதானத்தில் விளையாடியிருக்கும் இங்கிலாந்து, வெற்றிகளை விடவும் தோல்விகளையே அதிகம் பெற்றிருக்கின்றது.
ஆக மொத்தத்தில் 1_0 என தொடரில் பின்நிலையில் இருக்கும் இங்கிலாந்து, இந்த மைதானத்தில் இன்னுமொரு தோல்வியை தழுவுமோ என ரசிகர்கள் கருத ஆரம்பித்துள்ளனர்.