இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இலங்கையின் 28 பேர் கொண்ட உத்தேச குழாம் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷ் தொடரில் பங்கேற்ற 18 வீரர்களுடன் சேர்த்து மொத்தம் 28 பேர் இந்த உத்தேச குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷ் தொடரில் பங்கேற்ற வீரர்கள் கடந்த 30 ம் திகதி நாடுதிரும்பி தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த 28 பேர் கொண்ட குழாமில் இருந்து 22 பேர் கொண்ட குழு இங்கிலாந்துடனான 3 ஒருநாள் போட்டிகள், 3 T20 போட்டிகள் கொண்ட தொடருக்கு பயணிக்கவுள்ளது.
மத்தியூஸ் , திமுத் கருணாரத்ன , தினேஷ் சந்திமால் & சுரங்க லக்மால் ஆகிய சிரேஷ்ட்ட வீரர்கள் இந்த குழாமில் உள்ளடக்கப்படாவிட்டாலும் நுவான் பிரதீப் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விபரம்.
குசல் பெரேரா , தனுஷ்க குணதிலக , பத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ , சதீர சமரவிக்கரம ,ஒஷாத பெர்னாண்டோ , குசல் மெண்டிஸ், தனஞ்சய டீ சில்வா , சரத் அசலங்க , கமில் மிஷார , நிரோஷன் டிக்வெல்ல , அசேன் பண்டார, தசுன் சானாக , சமிக்க கருணாரத்ன , தனஞ்சய லக்ஷன் , வாணிந்து ஹசாரங்க, ரமேஷ் மெண்டிஸ், லக்ஷன் சந்தகன் , அகில தனஞ்சய, பிரவீன் ஜெயவிக்ரம , துஷ்மந்த சமீர ,இசுரு உதான, பினுரா பெர்னாண்டோ , நுவான் பிரதீப் , ஷிரான் பெர்னாண்டோ, கசுன் ராஜித, அசித்த பெர்னாண்டோ , இஷான் ஜயரத்ன