இங்கிலாந்து உடனான தொடரை தோல்விகளுடன் முடித்துக் கொண்டது இலங்கை- 3வது போட்டி கைவிடப்பட்டது முழுமையான ஒரு பார்வை..!

இங்கிலாந்து உடனான தொடரை தோல்விகளுடன் முடித்துக் கொண்டது இலங்கை- 3வது போட்டி கைவிடப்பட்டது முழுமையான ஒரு பார்வை..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.

குசல் ஜனித் பெரேரா தலைமையில் இளம் அணியாக இங்கிலாந்து புறப்பட்டு இலங்கை அணி பலத்த அவமானங்களும் ,பின்னடைவுகளுடனும் இங்கிலாந்து தொடரை இன்றோடு நிறைவுக்குக் கொண்டு வருகிறது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்தது, மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை தழுவிக் கொண்டது.

அதன் பின்னர் ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை வீரர்கள் மூவர் ஒழுக்காற்றுப் பிரச்சனை காரணமாக சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.

திக்வெல்ல, குணதிலக்க, குசல் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் ஒழுக்காற்று பிரச்சனை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு, இங்கிலாந்து தொடரை இடைநடுவே முடித்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வும் இங்கிலாந்து தொடரில் அரங்கேறியது.

இலங்கை அணி வலுவிழந்த அணியாக ஒருநாள் தொடரை சந்தித்தது, 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை தழுவ, இன்று மூன்றாவது போட்டியில் இலங்கை மோசமான துடுப்பாட்ட பங்களிப்பை சந்தித்துக் கொண்டது.

ஆயிினும்கூட மைதானத்தில் தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக, மூன்றாவதும் இறுதியுமான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது இந்த தொடரை பொறுத்த வரையில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக ஹசரங்க காணப்படுகிறார். அவர் 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை, இலங்கை அணி சார்பில் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக துஷ்மந்த சமீர காணப்படுகிறார்.

இலங்கை சார்பில் அதீத நம்பிக்கைகளுடன் வாய்ப்புக்கள் அதிகமாக வழங்கப்பட்ட பத்தும் நிசங்க பலத்த ஏமாற்றமளித்தமையும் குறிப்பிிடத்தக்கது.

இலங்கை வீரர்கள் இந்த தொடரில் ஒரே மாதிரியான துடுப்பாட்ட தவறுகளை மேற்கொண்டு ஆட்டமிழந்தமையும் அதிக விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

இலங்கையணி வீரர்கள் அவிஷ்க பெரனான்டோ ,ஹசரங்க ஆகியோர் ஒரேமாதிரியான தவறுகளின் ஆட்டமிழந்தமை நோக்கத்தக்கது.

இப்போது இங்கிலாந்து தொடரில் இலங்கைக்கு மிகப்பெரிய சிக்கல்களையும், வேதனைகளையும் கொடுத்திருக்கும் நிலையில் அடுத்து இந்தியாவுடனான தொடர் வருகின்ற 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுடனான தொடருக்கு யார் தலைவராக வரப்போகிறார், அணியில் எந்த எந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் எனும் கேள்வி இலங்கை ரசிகர்களுக்்கு இப்போதைய நிலையில் எழுந்தது.

இந்த கேள்விகளுக்கான விடையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பு கொடுத்து ரசிகர்களை இனிவரும் காலங்களிலாவது திருப்திக்கு உட்படுத்துகிறதா என்று பார்க்கலாம்.

l