இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம், அவுஸ்திரேலியாவுக்கு யார்? – ஆஷஸ் தொடர் கொடுத்த சிக்கல் …!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம், அவுஸ்திரேலியாவுக்கு யார்? – ஆஷஸ் தொடர் கொடுத்த சிக்கல் …!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பின்னர் இரு நாட்டு பயிற்சியாளர்களுக்கு பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தோல்வியை தழுவிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வருபவர் கிறிஸ் சில்வர்வுட்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுமோசமாக இழந்தது. இதையடுத்து கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து அணிதலைவர் காலிங்வுட் செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேநேரம் சிரேஷ்ட வீரர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள் என்பதை காரணம் காட்டி அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கார் பதவி விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பில் இதுவரை இன்னும் அறிவிக்கப்படவில்லை.