இங்கிலாந்து டெஸ்ட் – இந்திய அணியின் பந்துவீச்சு சாதனைகள்

இங்கிலாந்து டெஸ்ட் – இந்திய அணியின் பந்துவீச்சு சாதனைகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி முதலாவது போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக பந்துவீச்சில் பிரகாசித்து வரும் இந்தியா இப் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக திணறி வருகிறது.

இந்நிலையில் ஆட்டத்தின் 3 ஆம் நாளான இன்று இங்கிலாந்து 578 என்னும் ஓட்ட எண்ணிக்கையில் தனது சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

இவ் இன்னிங்ஸ் இல் இந்திய அணியின் பந்துவீச்சு தொடர்பான தரவுகள்.

190.1 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியதன் மூலம் சமீப காலத்தில் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடிய அணியாக இங்கிலாந்து திகழ்கிறது.
இதற்கு முன்னர் 2004/05 தொடரில் தென் ஆபிரிக்கா இந்திய அணிக்கெதிராக 190.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியிருந்தது.

இவ் இன்னிங்ஸ் இல் 20 No Ball வீசி 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக Ahmedabad இல் இந்திய அணி வீசிய No Ball எண்ணிக்கையை சமன் செய்ததது. சொந்த மண்ணில் இது போன்று முறையற்ற பந்துகளை வேறு சந்தர்ப்பத்தில் இந்திய அணி வீசியதில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் ரவி அஷ்வின் இந்த இன்னிங்சில் 53.1 ஓவர்கள் பந்துவீசியுள்ளார். ஒரு இன்னிங்சில் அவர் வீசிய அதிக ஓவர்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிறுவிறுப்பான போட்டி – இறுதி நொடியில் புள்ளிகளை தவறவிட்டது மான்செஸ்டர் யுனைடெட்
Next article#INDvENG_இந்தியா தடுமாற்றமான ஆரம்பம்