இங்கிலாந்து மண்ணில் இந்தியாவிற்கு முதல் நெருக்கடி _ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அணியிலிருந்து விலகல்..!
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீர்ரான ஷூப்மான் கில் உபாதை காரணமாக விலகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய தொடரின்போது அறிமுகம் மேற்கொண்டிருந்த கில், இந்தியாவின் முதல் தெரிவு ஆரம்ப வீரராக ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரிலும் ரோகித் சர்மாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவருக்கு ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக சத்திர சிகிச்சையும் மேற்கொள்ள இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணத்தால் புதுமுக வீரர் அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்ட இருப்பதாக இந்திய கிரிக்கெட் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அணியில் லோகேஷ் ராகுல் மற்றும் அகர்வால் ஆகிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருககும் நிலையில் ரோகித் சர்மாவுடன் யார் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் காண்பார் எனும் எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எழுந்திருக்கின்றது.