இங்கிலாந்து மண்ணில் வரலாற்றை மாற்றி எழுதியது இந்தியா, ஓவல் மைதானத்தில் அபார வெற்றி..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி ஓவல் மைதானத்தில் நிறைவுக்குவந்துள்ளது.

இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இந்த 4வது போட்டி தொடரை தீர்மானிக்கல்ல முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 368 எனும் இமாலய இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 210 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுக்க இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தது, இங்கிலாந்து 290 ஓட்டங்கள் பெற்று சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.

99 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இந்தியா இந்த போட்டியை எவ்வாறு எதிர் கொள்ளும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடையிலான மிகச் சிறந்த 83 ஓட்டங்கள் ஆரம்ப இணைப்பாட்டம், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா, ரோகித் சர்மா ஆகியோரின் அற்புதமான 153 ஓட்டங்கள் சத இணைப்பாட்டம் இந்தியாவை ஓரளவிற்கு இந்த போட்டியிலேயே போராட செய்தது.

மிக அற்புதமாக ரோகித் சர்மா இன்று 129 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார், அண்மைக்காலமாக தடுமாறிக் கொண்டு வரும் புஜாரா இந்த போட்டியில் அற்புதமான 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

விராட் கோலி 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் இந்தியா நெருக்கடியை சந்தித்தது, அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பான்ட் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரது சத இணைப்பாட்டம் புரிந்து இந்தியாவை மீட்டெடுத்தனர்.

அதற்கு பின்னர் உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் மூலமாகவும் ஓட்டங்கள் பெறப்பட இந்தியா 466 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 368 எனும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய 4 ம் நாள் நிறைவுக்கு வருகின்ற போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்கள் பெற்றது, இன்று ஐந்தாவதும் இறுதியுமான நாளில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 291 ஓட்டங்கள் தேவைப்பட்டது, இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகள் தேவையாக இருக்க, போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று விடுமோ என்கின்ற எண்ணம் அதிகமானவர்களுக்கு எழுந்தது.

ஆனால் விராட் கோலி அதனை பொய்ப்பித்து வென்றுகாட்டி வரலாறு படைத்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் நிறைவுக்கு வந்த நிலையில் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார், 5 இறுதியுமான டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் மைதானத்தில் வருகிற 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.