இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து பாதுகாப்பு வல்லுனர்கள் பாகிஸ்தான் பயணம் ,பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ..!

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைகள் தமது பாதுகாப்பு நிபுணர்களை பாகிஸ்தான் அனுப்பி போட்டி ஏற்பாடுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய நிபணர்களை அனுப்பியுள்ளன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் ரெக் டிக்கின்சன் நியூசிலாந்து கிரிக்கெட்டால் (NZC) பணியமர்த்தப்பட்டார், அதேபோன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) டேவிட் சீனியரை லாகூருக்கு அனுப்பியுள்ளது.

பாதுகாப்பு வல்லுநர்கள் நாளை (23 ) தங்கள் பணியைத் தொடங்குவார்கள், அந்த சமயத்தில் பாதுகாப்பு நிபுணர்கள் கடாபி மைதானம் ,ராவல்பிண்டி போன்றவற்றுக்கும் செல்வார்கள் என தெரியவருகின்றது.

அங்கு குறித்த நிபுணர்களுக்கு பஞ்சாப் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் விளக்கமளிக்கப்படும்.

ஆதாரங்களின்படி நியூசிலாந்து கிரிக்கெட்டால் (NZC) பணியமர்த்தப்பட்ட டிக்கின்சன் ஆகஸ்ட் 27 அன்று பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு திரும்புவார் , டேவிட் சீனியர் இங்கிலாந்து மகளிர் அணியின் சுற்றுப்பயணம் வரை பாகிஸ்தானில் இருப்பார் எனவும்் அறியவருகின்றது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் ,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளின் பாகிஸ்தான் பயணத்துக்கு முன்னதாக,  அங்கிருக்கும் பாதுகாப்பை நிலைமைகளை ஆய்வு செய்து வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தொடரை வெற்றிகரமாக முடிப்பதே இந்த நிபுணர்களின் விஜயத்தின் நோக்கமாகும்.