இங்கிலாந்து வீரர்களின் கொரோனா – இலங்கை, இந்திய தொடரில் வரும் கெடுபிடிகள்…!

இங்கிலாந்து வீரர்களின் கொரோனா – இலங்கை, இந்திய தொடரில் வரும் கெடுபிடிகள்…!

இலங்கை அணி இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணியுடனான தொடரில் வரும் 13 ம் திகதி களமிறங்கவுள்ளது.

இதனிடையே இங்கிலாந்து வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதால் சிலவேளைகளில் இலங்கை வீரர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்ச நிலைமை தொடர்கின்றது.

சுற்றுப்பயணத்தை சீராக செய்ய, இலங்கை கிரிக்கெட்டிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியும் எச்சரிக்கப்பட்டு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வீரர்கள் சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட பொருத்தமான தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் அவர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் அடிக்கடி பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

ஆகவே இலங்கை வீரர்கள் மட்டுமல்லாது இந்திய வீரர்களும் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதால் அதிக நடைமுறை ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.