இங்கிலாந்து 50+ வயது அணியில் இலங்கையர்..!

இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான அமல் தலுகொட, எந்தவொரு வயதுப் பிரிவிலும் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் அமல் தலுகொட, சமீபத்தில் இங்கிலாந்து 50 வயதுக்கு மேற்பட்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்,

மேலும் அவர் மே 12 ஆம் தேதி வேல்ஸுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளார். இவர் எதிர்வரும் உலகக் கிண்ண 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான இங்கிலாந்தின் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.