இங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட்டில் கோஹ்லி படைத்த மோசமான சாதனைகள்..! ?
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நொட்டிங்காம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் முதல் நாளில் ஆடிய இங்கிலாந்து 183 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்கு ஆடிவரும் இந்திய அணி ஆரம்ப இணைப்பாட்டம் 97 ஓட்டங்களாக இருந்தாலும், அதன்பின்னர் வந்த புஜாரா, கோஹ்லி, ரஹானே ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினார்.
ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே கோஹ்லி தன் விக்கெட்டை (Golden Duck) மூலமாக பறிகொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒற்றைப் பந்தில் கோஹ்லியின் கதையை முடித்த ஆண்டர்சன்..! (வீடியோ இணைப்பு)
கோஹ்லியின் மோசமான சாதனைகள்.
• 5 வது முறையாக கோஹ்லி Golden Duck -முதல் பந்திலேயே வெளியேற்றப்பட்டார்.
• இங்கிலாந்துக்கு எதிராக 3 வது முறையாகவும்,
ஒட்டுமொத்தமாக டெஸ்ட்களில் அவரது 13 வது Duck out ஆட்டமிழப்பாகும்.
• ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 6 வது முறையாக கோஹ்லியை வெளியேற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக 9 வது தடவையாக கோஹ்லியை ஆட்டமிழக்க செய்துள்ளார்.
• அணித்தலைவராக அதிக Duck out ஆட்டமிழப்புக்கள் எனும் சாதனையும் கோஹ்லி வசமானது, இதுவரை தோனி 8 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார், இன்று கோஹ்லி 9 வது தடவையாக ஓட்டம் பெறாது (Duck out) டெஸ்ட்டில் ஆட்டமிழந்துள்ளார்.