இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்குகுமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று நடைபெற்ற இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிப்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியை பணித்தார.
பலமிழந்த அணியாக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தட்டுத்தடுமாறி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும் மற்றையவர்கள் சோபிக்கவில்லை.
5 ம் இலக்கத்தில் துடுப்பாடிய வனிது ஹசரங்க 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார.
அணித்தலைவர் குசல் பெரேராவுடன் இணைந்து 4 வது விக்கட்டில் 99 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
186 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்த்து.
இங்லாந்து அணி சார்பில் 150 ஒருநாள் போட்டியில் ஆடும் ஜோ ரூட் ஆட்டமிழக்காது 79 , பெயர்ஸ்டோ 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் இன்று 3 வீரர்கள் அறிமுகமானமை முக்கியமானது.