இங்கிலாந்தை கட்டுப்படுத்த புதிய ஐடியாவை கையிலெடுத்த அஸ்வின்…!
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக உள்ளூர் கழகமட்ட போட்டியில் சர்ரே அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்தமாதம் ஆகஸ்ட் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கிடையே டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்தின் உள்ளூர் அணியொன்றுடன் பயிற்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறு BCCI கேட்டுக்கொண்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும், கவுண்டி சம்பியன்ஷிப் தொடரை பொறுத்தமட்டில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை மாத்திரம் தான் இறுதி பதினொருவர் அணியில் சேர்க்க முடியும்.
எனவே சர்ரே அணி, ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா மற்றும் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர், இதில் கைல் ஜேமிசன் உபாதையினால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அஸ்வின் சிலவேளைகளில் விளையாடமுடியும் என்று நம்பப்படுகின்றது.