இங்கிலாந்தை சந்திக்கவுள்ள இந்திய T20 அணி விபரம் அறிவிப்பு- 3 தமிழக வீரர்கள்…!

இங்கிலாந்தை சந்திக்கவுள்ள இந்திய T20 அணி விபரம் அறிவிப்பு- 3 தமிழக வீரர்கள்…!

இங்கிலாந்தை சந்திக்கவுள்ள இந்திய T20 அணி விபரம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இதிலே 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நடராஜன் , வோஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பமசமாகும்.

இதிலே மஹேல ஜெயவர்த்தன பயிற்சியாளராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரான சூரியகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

நீண்டகாலமாக மிகச்சிறப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவந்தாலும், இந்திய தேர்வாளர்கள் சூரியகுமார் யாதவை அணியில் சேர்க்காமை விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.

இந்தநிலையில் முதல்முறையாக சூரியகுமார் யாதவ் இந்திய தேசிய குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான அணியிலியேயே இணைக்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பாண்ட் மீளவும் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னுமொரு அதிரடி வீரர் இஷான் கிஷானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உபாதைகளால் அவதிப்பட்ட புவனேஷ்வர் குமாருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய T20 அணி-

விராட் கோஹ்லி (தலைவர் ),
ரோஹித் சர்மா (உதவி தலைவர் ),
KL ராகுல் ,
ஷிகர் தவான்,
ஷ்ரேயஸ் ஐயர்,
சூரியகுமார் யாதவ்,
ஹர்டிக் பாண்டியா ,
ரிஷாப் பான்ட் (விக்கெட் காப்பாளர் ),
இஷான் கிஷான் (விக்கெட் காப்பாளர் ),
யுஸ்வேந்த்ரா சஹால்,
வருண் சக்ரவர்த்தி ,
அக்சார் பட்டேல் ,
வாஷிங்டன் சுந்தர் ,
ராகுல் தேவாதியா,
T நடராஜன்,
புவனேஸ்வர் குமார் ,
தீபக் சஹர்,
நவ்தீப் சைனி,
ஷரத்துல் தாகூர் .

5 போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன, 5 ஆட்டங்களும் அகமதாபாத்தில் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

முதலாவது T20 -மார்ச் 12 -அஹமதாபாத்

2 வது T20 -மார்ச் 14 -அஹமதாபாத்

3 வது T20 -மார்ச் 16 -அஹமதாபாத்

4 வது T20 -மார்ச் 18 -அஹமதாபாத்

5 வது T20 -மார்ச் 20 -அஹமதாபாத்

Previous articleதோனி வசம் இருக்கும் தனித்துவமான சாதனை
Next articleஇந்திய அணியில் இடம்பிடித்த மஹேலவின் வாரிசு…!