இங்கிலாந்தை தோற்கடித்து வரலாற்றை எழுதிய வெஸ்ட் இண்டீஸ் – கவனத்தை ஈர்த்த வீரர்கள் தொடர்பான பார்வை..!
இங்கிலாந்தின் வெஸ்ட்இன்டிஸ் சுற்றுப்பயணத்தின் ஐந்து ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரின் முடிவுகள் 2-2 என்று சமநிலையில் இருக்க, நேற்று நடந்த ஐந்தாவது போட்டியில் வெஸ்ட்இன்டிஸ் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இத்தொடரிலிருந்து சில வீரர்களைப் பற்றி பார்ப்போம்.
Akeal Hosein: இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இந்த இளம் வீரரின் சமயோசிதமான லைன்&லென்த் மட்டுமல்லாது, தொடரின் இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் இவர் ஆடிய விதமும் கவனம் பெற்றுள்ளது. தொடரை நிர்ணயிக்கும் நேற்றைய போட்டியில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகப் பந்து வீச்சில் 4/30 என்று இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளைப் பறித்துள்ளார். இவரைப் போலான இடக்கை சுழற்பந்து வீச்சாள பேட்ஸ்மேன் Fabian Allenனுக்கு சிறப்பாகச் செயல்பட வேண்டிய நெருக்கடியை அதிகரித்துள்ளார்.
Rovman Powell: இவரது பவர் ஹிட்டிங் பார்ப்பதற்கே பரவசமாய் இருக்கிறது. ஆனால் Flatடாக இவர் அடிக்கும் வேகத்தில் பந்து தெறிக்கும் போது ஒரு பவுலராக அல்லாமல் பீல்டராக கற்பனை செய்வதே திகிலைக் கூட்டுகிறது. பவர் ஹிட்டர் என்றாலும் batயை காற்றில் வீசாமல் பந்தின் லைன்&லென்திற்கு உடன்பட்டு தாக்குகிறார். பந்து வீசாத ரஸலாய்த்தான் இவரைப் பார்க்கிறேன். தொடரில் இரண்டாவது முன்னிலைக்கான மூன்றாவது ஆட்டத்தில் இவரது சதம் ipl அணிகளுக்கான அழைப்பு மணி!
Jason Holder: வெஸ்ட்இன்டிஸ் என்ற ஓட்டைக் கப்பலின் ஆபத்பாந்த பொறியாளராக எப்போதும் இருப்பவர். பந்துவீச்சு இல்லை பேட்டிங் என்று வெஸ்ட்இன்டிஸ் அணியின் குறைகளை எதை வைத்தாவது ஈடுகட்டக்கூடிய போராளி. கடைசி ஓவரில் 20 ரன்கள் இங்கிலாந்திற்கு தேவைப்பட ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தொடர்ந்து நாலு விக்கெட்டுகளை காவு வாங்கி, இருபது ஓவர் போட்டியில் முதல் ஹாட்ரிக் எடுத்த வெஸ்ட்இன்டிஸ் பவுலர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார் இந்த உயர்ந்த மனிதர். நான்காவது போட்டியில் இவரது ஓவரில் தொடர்ந்து நாலு சிக்ஸர்களை மொயின் அலி விளாசியதற்கான கணக்கை மிக கச்சிதமாகத் தீர்த்து விட்டார்.
Romario Shepherd: வேகப்பந்து வீச்சாளரான இந்த இளம் வீரர் வெஸ்ட்இன்டிசிற்கு இன்னொரு ஆல்ரவுண்டராய் வந்திருக்கிறார். தற்போதைக்கு ஒரு சிறிய அதிரடி ஆட்டத்தின் மூலம் 20, 30 ரன்களை அணிக்கு எடுத்து தரக்கூடிய பின்ச் ஹிட்டராய் பயன்படுத்திக்கொள்வதற்கான இலட்சணங்களோடு இருக்கிறார்.
வெஸ்ட்இன்ட்டிஸ் அணிக்கும் இது தேவையாகத்தான் இருக்கிறது. எது வெஸ்ட்இன்டிஸிற்கு பின்ச் ஹிட்டரானு அதிர்ச்சியடைய வேண்டாம். அவர்கள் திருந்தி ஆட்டத்தைக் கட்டமைத்து ஆடப்போவதாக முடிவு செய்திருக்கிறார்கள் போல. நேற்றைய போட்டியிலும் அணிநிர்வாகம் இவரை அப்படித்தான் அனுப்பி வைத்தது. பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையாவது கைப்பற்றும் இவர் ரன்களை விட்டுத்தந்து தருவது பின்னடைவாய் இருக்கிறது. ஜேசன் ஹோல்டரை பந்துவீச்சாளராகக் கவனம் செலுத்த சொன்னதைப்போல இவருக்கும் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த சொல்வது நல்லது.
2021 Cpl இறுதிப்போட்டியின் கதாநாயகன் ஆல்ரவுண்டர் Dominic Drakes வேறு இருக்கிறார். இங்க ஹர்திக் இல்லனா பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டிய நிலை!
கைவசம் நான்கு விக்கெட்டுகளை வைத்திருந்த இங்கிலாந்தின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19வது ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுத்தந்த sheldon cottrellன் பங்களிப்பும் இந்த வெற்றியில் முக்கியமானது.
இங்கிலாந்தைப் பற்றிச் சொல்ல பெரிதாய் எதுவுமில்லை. மொயின்அலி முன்பை விட உற்சாகமாய் தீவிரமாய் பேட்டிங் பவுலிங்கில் தன் பங்களிப்பின் மூலம் தாக்கத்தை உண்டாக்குகிறார். Phill Salt என்ற புதுவீரர் நன்றாய் ஆடுகிறார்.
இங்கிலாந்திற்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட நிறைய தரமான வீரர்கள் கொட்டிக்கிடக்கிறார்கள். உலகக்கோப்பையைக் கைப்பற்றும் திட்டமாக 2015லிருந்து flat பிட்சுகளாக போட்டு மரபு, கெளரவம் என்பதிலிருந்து இங்கிலீஷ் கிரிக்கெட் இறங்கி வந்ததின் பயன் இது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரிவு உண்டாகி இருப்பது அது வலி தனி டிபார்ட்மென்ட்!
Richards