லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஷமியும் பும்ராவும் 20 ஓவர்கள் ஆடிய பிட்சில் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் 60 ஓவர்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் 120 ரன்களுக்கு மடிந்ததையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மீது இங்கிலாந்து ஊடகங்கள் காட்டமான விமர்சனம் வைத்துள்ளன.
டெலிகிராப் பத்திரிக்கையில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய்காட் எழுதியப் பத்தியில், “இந்த டெஸ்ட் போட்டி இரண்டு விஷயங்களை நிரூபித்துள்ளது.
அதாவது இங்கிலாந்தை உணர்ச்சி ஆதிக்கம் செலுத்தியது .வேகப்பந்து வீச்சாளர்கள் மூளையிழந்து செயல்பட்டாலும் உணர்ச்சிவயப்பட்டாலும் கேப்டன் என்பவர் நிதானத்துடன் இருக்க வேண்டும்.
உணர்ச்சியில் ஆழ்ந்து போய் பவுன்சர் வீசினர், ரூட் தன் இலக்கை இழந்தார்.” என்றார் பாய்காட்.
வைடன் பத்திரிகை எடிட்டர் லாரன்ஸ் பூத் என்பவர் ரூட்டின் கேப்டன்சி பற்றி கூறும்போது, “மொயின் அலி பந்தில் பும்ராவுக்கு ரூட் கேட்சை விட்டார். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியதால் எட்ஜ் எடுத்ததும் அவருக்கு திகைப்பு ஏற்பட்டு கேட்சை விட்டார் என்று குறிப்பட்டார்.
எதிரணியுடன் ஒன்றிரண்டு வார்த்தைப் பரிமாற்றங்கள் என்பது வேறு, 2 டெய்ல் எண்டர்கள் உங்களை முட்டாளாக்கியது வேறு.
இங்கிலாந்து கிரிக்கெட் இது போன்ற இருண்ட காலங்களைக் கடந்து வந்துள்ளது, அத்தகைய இருண்ட தருணமே இது.” என்று வசமாக சாடியுள்ளார்.
வர்ணனையாளர் டேவிட் லாய்ட் கூறும்போது, “இங்கிலாந்து பழிவாங்குவதில் நேரத்தைச் செலவிட்டது என்றும் டெய்ல்-எண்ட் பார்ட்னர்ஷிப் எப்போதும் ஒரு மகா விஷயமாகும்.
இங்கிலாந்தை கோமாளியாக்கி ஷமி, பும்ரா அங்கு நன்றாக போட்டியை மாற்றினர் ,இங்கிலாந்து மொத்தத்தில் அனைத்தையும் இழந்தது என்றார்.
தி கார்டியன் இதழ், “ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் கோலி 4ம் நாள் மாலை கூறியது போல், ‘இது உங்கள் Backyard அல்ல என்பதுபோல் சாதித்துள்ளனர் என பாராட்டியுள்ளது.