இசுரு உதான அபார பந்துவீச்சு ,பொல்லார்ட்டின் சிக்சர் மழை அபார வெற்றி ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு..!
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரிபியன் பிரீமியர் லீக் போட்டி தொடரின் நான்காவது போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
நேற்று இடம்பெற்ற போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் ரோயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் அவ உதானவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.
இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இசுரு உதான கரிபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை அள்ளி அபார ஆற்றலை வெளிப்படுத்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து போட்டியில் அபார வெற்றியைப் பெற்றது.
பொல்லார்ட் 6 சிக்சர்கள் அடங்கலாக 30 பந்துகளில் 58 ஓட்டங்களை விளாசினார், இது மாத்திரமல்லாமல் CPL போட்டிகள் வரலாற்றில் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார்.
ஆக மொத்தத்தில் போஒல்லார்ட், இசுரு உதான இணைந்து டிரின்பகோ நைட்ரைடர்ஸ் அணிக்கு அபார வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.