இந்தாண்டுக்கான Big Match நடக்குமா? -விளையாட்டுத்துறை அமைசர் தகவல்..!

இந்தாண்டுக்கான Big Match நடக்குமா? -விளையாட்டுத்துறை அமைசர் தகவல்..!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாடசாலைகளின் வருடாந்த கிரிக்கெட் Big Match போட்டிகளை நடத்துவதற்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.

அதிபர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் கலந்துரையாடினார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் Big Match போட்டிகளை நடத்த வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் புதன்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு கவுன்சில் (NSC) தலைவர் மஹேல ஜெயவர்தன வழங்கிய தேசிய விளையாட்டு மேம்படுத்தல் நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர், ரோயல்-தோமியன், ஆனந்த-நாலந்தா மற்றும் ரிச்மண்ட்-மஹிந்தா போன்ற Big Match போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என தெரிவித்தார்.

COVID-19 தோற்றால் கடந்த ஆண்டு பெரும்பான்மையான Big Match போட்டிகளை நடத்த முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் ரோயல்-தோமியன் மோதலுக்குப் பிறகு, அனைத்து Big Match போட்டிகளும் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில்தான் இம்முறை Big Match போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.