இந்தியாவால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியுமா – சில சந்தர்ப்பங்கள்…!

இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தாலும் இந்தியா இன்னும் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறவில்லை.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்,
இந்தியா ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும்,
பாகிஸ்தானை இலங்கை தோற்கடிக்க வேண்டும்,
இந்த சூழ்நிலையில், இலங்கை மூன்று வெற்றிகளுடன் தகுதி பெறும் அதேநேரம் மற்றைய அனைத்து அணிகளும் ஒரு வெற்றியுடன் முடிவடையும்.

இந்த சூழ்நிலையில் அதிக நிகர ரன் ரேட் கொண்ட அணி தகுதி பெறலாம். அப்படி அமையுமாக இருந்தால் மட்டுமே இந்தியாவுக்கான இறுதிப் போட்டி வாய்ப்பு உருவாகும்.

இதேநேரம் இலங்கை இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது, சிலவேளைகளில் இலங்கை இறுதிப் போட்டியை எட்டாமல் இருக்க அரிதான வாய்ப்பே காணப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்,
ஆப்கானிஸ்தான் இந்தியாவை வீழ்த்த வேண்டும்,
பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்த வேண்டும்,
இந்த சூழ்நிலையில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெறும் அதிலே அதிக ஓட்ட விகிதத்தைக் கொண்ட இரு அணிகளும் தகுதி பெறும். அந்தநிலையில் இலங்கையின் நிகரவேகத்தைவிட மற்றைய இரு அணிகள் நிகர ஓட்டவிகிதம் அதிகமாக கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்.

எவ்வாறாயினும் இந்திய, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எமது YouTube தளத்துக்கு ?