இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளேவை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016-17ம் ஆண்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாக அனில் கும்ப்ளே இருந்தபோது, கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார்.
பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகுவதற்கு விராட் கோலி பல்வேறு விதத்தில் காரணமாக இருந்தார், அவருடன் மோதலில் ஈடுபட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு அப்போது பயிற்சியாளராக கும்ப்ளேவை நியமித்தது. ஆனால், கோலியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கும்ப்ளே, பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் தோல்விக்குப்பின் பதவியிலிருந்து விலகினார்.
இப்போது பிசிசிஐ தலைவராக கங்குலி இருப்பதால்,மீண்டும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே கொண்டுவரப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவிசாஸ்திரி பதவிக்காலம் டி20உலகக் கோப்பையுடன் முடிந்தபின், தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லட்சுமண் இருவரில் யார் தயாராக இருக்கிறார்களோ அவரிடம் இருந்து விண்ணப்பிக்க கோரப்படும் எனத் BCCI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம், பயிற்சியாளர் அனுபவம் கொண்ட கும்ப்ளே, லட்சுமண் ஆகியோர் முதல் தகுதியுடையவர்களாக இருக்க முடியும். வெளிநாட்டு பயிற்சியாளர் 2-வது வாய்ப்புதான். கிரிக்கெட்டில் நல்ல டிராக் ரெக்கார்டு இருப்பவர்களும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விக்ரம் ரத்தோர்கூட விருப்பமாக இருந்தாலும், அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடியஅனுபவம் இல்லை, இது தலைைமப்பயிற்சியாளர் பதவி, ஆனால் ரத்தோருக்கு இருக்கும் தகுதிக்கு துணைப்பயிற்சியாளராக இருக்கத்தான் சிறந்தவர் என BCCI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விபரங்களுக்கு இந்த காணொளியை பாருங்கள்.