இந்தியாவின் அடுத்த வெளிநாட்டு சுற்றுலா தென்னாபிரிக்காவில் -டிசம்பரில் டெஸ்ட் போட்டிகள்..!

இந்தியாவின் அடுத்த வெளிநாட்டு சுற்றுலா தென்னாபிரிக்காவில் -டிசம்பரில் டெஸ்ட் போட்டிகள்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்றுவருகின்றது.

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் போட்டியாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது, இதனைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடவுள்ள அடுத்த டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இடம்பெறவுள்ளது.

 

டிசம்பரில் ஆரம்பிக்கின்ற இந்த சுற்றுலா ஜனவரியில் முடியவுள்ளது. இந்திய அணி இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் இரண்டு வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதாக அட்டவணைப்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா தொடர்களே அவையாகும், ஆக மொத்தத்தில் இங்கிலாந்து அணியுடனான தொடர் இப்போது இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு அடுத்ததாக தென் ஆப்பிரிக்க தொடரும் இடம்பெறவுள்ளமையும் சுட்டிக்காட்டதக்கது.

இந்த இரண்டு வெளிநாட்டு தொடர்களையும் முடித்த பின்னர் இந்திய அணியின் அத்தனை டெஸ்ட்  தொடர்களும் சொந்த விளையாடப்படுகின்ற தொடர்கள் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

ஆக மொத்தத்தில் இங்கிலாந்து தொடரை வெற்றியுடன் முடித்தது, தென் ஆப்பிரிக்க தொடரையும் பெருமளவிலான தோல்விகளை இந்தியா தவிர்க்கும் பட்சத்தில், ஐசிசி டெஸ்ட்  சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் இந்தியா முன்னிலை வகிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது.

3 டெஸ்ட் போட்டிகள் ,3 ஒருநாள் போட்டிகள், 4 டுவென்டி டுவென்டி போட்டிகள் இதிலே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

ழுளனமையான அட்டவணை விவரம் ?????