இந்தியாவின் உலகக்கிண்ண அணிக்குள் நுழைகிறார் உம்ரன் மாலிக்- அடித்தது அதிர்ஷ்டம்..!
இந்தியாவின் உலக T20 போட்டிகளுக்கான குழாத்தில் இளம் வீரர் மாலிக் இணைக்கப்பட உள்ளதாக ANI செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நெட் போலராக ஐதராபாத் அணியில் இணைக்கப்பட்டு இருந்து ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 21 வயதானும்ரன் மாலிக், இந்தியர்கள் சார்பில் அதிவேகமாக பந்து வீசிய IPL பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
SRH அணியில் இணைக்கப்பட்டிருந்த மாலிக் 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி எல்லோருடைய பார்வையையும் பெற்றிருந்தார்,
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்து வரவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ண போட்டிக்கான இந்தியாவின் அணியில் நெட் போலராக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .