இந்தியாவின் உலகக் கிண்ண அணி எப்போது அறிவிக்கப்படும் தெரியுமா -இந்திய கிரிக்கெட் சபை தகவல்..!

இந்தியாவின் உலகக் கிண்ண அணி எப்போது அறிவிக்கப்படும் தெரியுமா -இந்திய கிரிக்கெட் சபை தகவல்..!

ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான அணிகளை அறிவிக்கும் இறுதித் திகதி இந்த மாதம் 10ஆம் திகதியாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இதுவரைக்கும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் தங்களுடைய உலகக் கிண்ணத்துக்கான அணிகளை உறுதிப்படுத்தி அறிவித்துள்ளன .

மற்ற அணிகள் இதுவரைக்கும் தங்கள் அணிகளை அறிவிக்கவில்லை, இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பெயர் விபரம் எப்போது அறிவிக்கப்படும் எனும் செய்தியை இந்திய கிரிக்கெட் தரப்பு வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நிறைவுக்கு வந்ததனை தொடர்ந்து இந்திய அணியின் பெயர் விபரத்தை எதிர்பார்க்கலாம் என செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அளவில் இந்திய அணி விபரம் வெளியாகும் நம்பப்படுகிறது.

ஏற்கனவே அதிகமான வீரர்கள் உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நான்காம் இலக்கத்திற்கு சூர்யகுமார் யாதவ் அதேபோன்று சிரேயாஸ் ஐயர் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

வாஷிங்டன் சுந்தர் உபாதைக்கு உள்ளாகிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கிடையிலும் போட்டி நிலவுகிறது.

எவ்வாறாயினும் நான்கு அல்லது ஐந்து தினங்களில் இந்தியாவின் இருபதுக்கு இருபது உலக கிண்ண அணியை எதிர் பார்க்கலாம் என நம்பப்படுகிறது.