இந்தியாவின் உலக கிண்ண நாயகனை தேடிவரும் இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவி , ஸ்டோக்ஸிடம் கேப்டன் பொறுப்பு ?

இந்தியாவின் உலக கிண்ண நாயகனை தேடிவரும் இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவி , ஸ்டோக்ஸிடம் கேப்டன் பொறுப்பு ?

இங்கிலாந்து கிரிக்கட்டில் கடந்த பிப்ரவரியில் கிறிஸ் சில்வர்வுட் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து, மறக்கமுடியாத ஆஷஸ் தோல்வியின் பின்பாக, அவரது இடத்துக்கு யார் வருவார் என்பதைச் சுற்றி கணிசமான சலசலப்பு உள்ளது.

ராப் கீ சமீபத்தில் ECB யின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு பொருத்தமான பல முக்கியப் பெயர்கள் வெளிவந்துள்ளன,

மேலும் கீ பயிற்சிப் பிரிவினை, Red Ball (டெஸ்ட்) மற்றும் White Ball (ODI +T20) கிரிக்கெட்டுக்கான கடமைகளைப் பிரித்துக் கொள்வார் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் எதிர்வரும் வாரத்தில் இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதேநேரம் இங்கிலாந்தின் சிவப்பு பந்து (டெஸ்ட் அணி) தலைமை பயிற்சியாளராக 2011 இந்தியாவுக்கு உலக கிண்ணம் வென்றுகொடுத்த கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்படுவார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது ?