இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக விளங்கும் தமிழகத்தின் விஜய் ஷங்கர் தான் ஒரு ஜக்ஸ் கல்லிஸ் அல்லது அவுஸ்ரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் போன்று வருவதற்கே ஆசைப்படுகிறேன் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பேட்டிக்குப் பின்னர் அதிகமான நெட்டிசன்கள் விஜய் ஷங்கரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றார்கள், தான் அண்மைக் காலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டும் இந்திய தேசிய அணிக்கு அழைக்கப்படாமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அண்மையில் விஜய்சங்கர் தெரிவித்திருந்தார். இதற்கும் அதிகமான நெட்டிசன்கள் தங்களுடைய மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து இப்போது பிந்திய கருத்து ஒன்றையும் விஜய்சங்கர் கூறுகிறார்.
நான் துடுப்பாட்ட வரிசையில் ஆறாம் இடத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஆசைப்படுவதில்லை, துடுப்பாட்டத்தில் முன்னகர்ந்து வந்து துடுப்பெடுத்தாடும் நிலைக்கே நான் அதிகம் விருப்பம் கொள்கிறேன் .
இந்தியாவைப் பொறுத்தவரையில் நான் ஒரு நேர்த்நியான சகலதுறை வீர்ராக செயற்படுவதையே திட்டமாக கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி விஜய் சங்கர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.அப்படி நிகழ்ந்தால் ஜக்ஸ் கல்லிஸ் அல்லது அவுஸ்ரேலியாவின் ஷேன் வாட்சன் போன்று வரமுடியும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் 2019 உலகக்கிண்ண அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட விஜய் ஷங்கரை, அதற்கு பின்னர் தேர்வாளர்கள் பெருமளவில் கவனிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
முன்னதாக 2019 அம்பத்தி ராயுடு உலகக்கிண்ண அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ,ஆயினும் இவரை விடுத்து திடீரென்று விஜய் சங்கரை அணிக்குள் அழைத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதாவது துடுப்பாட்டம், பந்துவீச்சு ,சிறந்த களத்தடுப்பு மூன்று துறைகளிலும் சிறந்து விளங்குவார் என்ற அடிப்படையிலேயே உலகக்கிண்ண அணியில் ராயுடுவிற்கு பதிலாக விஜய் ஷங்கர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதுவே மிகப்பெரிய சர்ச்சையையும் தோற்றுவித்தது.
விஜய் ஷங்கரும் 3 ஆட்டங்களில் விளையாடி இருந்தாலும் பேசும் அளவில் பெரிதாக ஒன்றையும் சாதித்திருக்கவில்லை, இப்போது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தபோதிலும் சொல்லும்படியாக எதனையும் சாதித்திருக்கவில்லை என்பதும் இங்கே முக்கியமானது.
அப்படியான நிலையில் விஜய் ஷங்கரின் இந்தக் கருத்து ரசிகர்களால் அதிகம் நகைப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.
சகலதுறை ஆட்டக்காரர் ஹார்திக் பாண்டியா உபாதையடையும் நிலையில் எல்லாம் விஜய்சங்கர் அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார், ஆனாலும் அண்மைக்காலமாக ஹார்திக் பாண்டியா உபாதை அடைந்தாலும் அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரை விடுத்து, மாற்று வீரர்களையே தேர்வு குழு தேர்வு செய்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.