இந்தியாவின் டாப் 5 எப்படி இருக்க வேண்டும் -கவாஸ்கர் கொடுத்த அறிவுரை.. தொடக்க வீரர் மீது விமர்சனம்

இந்திய டெஸ்ட் அணியின் டாப் 5 இப்படி தான் இருக்கனும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. எஞ்சிய போட்டியில் 9 போட்டிகளில் வென்றால் மட்டுமே இறுதிக்கு முன்னேற முடியும்.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியை எப்படி கட்டமைப்பது என்று ரோகித் சர்மாவுக்கு கவாஸ்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மாயங் அகர்வால்

தொடக்க வீரராக மாயங் அகர்வாலை தான் தேர்வு செய்வேன். மாய்ங் அகர்வால் சொந்த மண்ணில் பாஸ் போல் விளையாடுகிறார். ஆனால் வெளிநாட்டில் ரன் குவிக்காமல் சொதப்புகிறார். ஆனால் சுப்மான் கில்லை காட்டிலும் மாயங் அகர்வால் தான் அதிக ரன்களை குவித்துள்ளார். வெளிநாட்டிலும் சதம் விளாச தொடங்கினால் அவரை அணியிலிருந்து நீக்கக் கூடாது.

சுப்மான் கில்

சுப்மான் கில் திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தற்போது காயத்திலிருந்து அணிக்கு திரும்பியுள்ளார். போட்டிக்கான பயிற்சி தற்போது அவரிடம் இருந்திருக்காது. ரஞ்சி போட்டியில் விளையாடி ரன் குவிக்காத வரை சுப்மான் கில்லை அணியில் சேர்க்க கூடாது.

விஹாரி

3வது வீரராக ஹனுமா விஹாரிக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் தான் அந்த இடத்துக்கு சரியான நபர்.அவர் இதுவரை என்ன தவறு செய்துள்ளார் . தென்னாப்பிரிக்க டெஸ்டில் கிடைத்த வாய்ப்பை கூட அவர் சரியாக பயன்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஸ்ரேயாஸ் ஐயர்

நம்பர் 5 இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் விளையாட வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல பார்மில் உள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். டாப் 5 வரிசையில் இடம்பெற அவருக்கு முழு தகுதியும் உள்ளது என்று கவாஸ்கர் கூறினார்.