இந்தியாவின் பெருத்த ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்திய இலங்கையின் பந்துவீச்சாளர்கள்-வெற்றி கிட்டுமா ?

இந்தியாவின் பெருத்த ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்திய இலங்கையின் பந்துவீச்சாளர்கள்-வெற்றி கிட்டுமா?

 இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டுவென்டி 20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை இலங்கை கட்டுப்படுத்தியிருக்கிறது.

இன்று இலங்கை சார்பில் இரண்டு வீரர்களும், இந்தியா சார்பில் இரண்டு வீரர்களுக்கும் அறிமுகம் கொடுக்கப்பட்டது.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷா ஆகியோரும் இலங்கை சார்பில் சரிித் அசலங்க , சமிக்க கருணாரத்ன ஆகியோருக்கும் அறிமுகம் கொடுக்கப்பட்டது.

போட்டியின் முதலாவது ஓவரில் தன்னுடைய முதலாவது பந்துவீச்சில் துஷ்மந்த சமீர  ,ஷாவை ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழக்க செய்தார்.

அதற்கு பின்னர் அடுத்த 2 விக்கெட்டுகளும் அரைச்சத இணைப்பாட்டம் பெறப்பட்டாலும் இந்தியாவால் எதிர்பார்த்த ஓட்ட குவிப்பை இன்று பெற்றுக்கொள்ள முடியாத போனமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக இன்றைய நாளில் பந்துவீசியமை கவனிக்கத்தக்கது.

20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

RPS மைதானத்தின் சராசரி ஓட்டக்குவிப்பு 164 என்பதும் குறிப்பிடத்தக்கது.