இந்தியாவின் மானம்காத்த ஷர்துல் தாகூர் , கோலியின் மெத்தனப் போக்கால் அடிபணிந்து இந்தியா..!

இந்தியாவின் மானம்காத்த ஷர்துல் தாகூர் , கோலியின் மெத்தனப் போக்கால் அடிபணிந்து இந்தியா..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்றுவருகிறது.

தொடரை தீர்மானிக்கவல்ல முக்கியமான 4வது போட்டி ஓவல் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

கோலி விடாப்பிடியாக அணியை தேர்வு செய்வதில்தான் இந்தியாவின் தோல்வி தொடர்கதையாகி கொண்டிருக்கிறது.

 

இன்றைய போட்டியில் அஸ்வின் இணைத்துக் கொள்ளப்படாாததோடு ரஹானேக்கும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க, இந்தியா மோசமாக இந்த போட்டியில் 191 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.

ஷர்துல் தாகூர் இந்தியாவின் மானம் காத்து அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார், கோலி இன்று 50 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

ஆயினும் இந்தியா 190 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇப்படியொரு பிடியெடுப்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் -கரீபியன் பிரீமியர் லீக்கில் மிரட்டிய  அகீல் ஹொசைன்..!
Next article2020 லிருந்து இந்திய துடுப்பாட்ட மும்மூர்த்திகளின் துடுப்பாட்ட சராசரி- ரொம்ப நல்லாருக்குப்பா..!