இந்தியாவின் மானம் காத்த அற்புத பிடியெடுப்பு – கில் கில்லிதான்….!

இந்திய மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது முக்கியமான போட்டியில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.

290 எனும் இமாலய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு பெரும் துணை புரிந்தார் ராசா, இந்திய பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்து கொண்டிருந்த சிகந்தர் ராசா இறுதிநேரத்தில் ஷூப்மான் கில்லின் அற்புதமான பிடி எடுப்பில் வீழ்ந்தார், இதனாலேயே இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது.

95 பந்துகளில் 115 ரன்கள் எடுத்த ராசா, 36 பந்துகளில் 28 ரன்கள் விளாசிய பிராட் எவன்ஸுடன் 104 ரன் பார்ட்னர்ஷிப் எடுத்து 290 ரன்களை துரத்தும்போது சொந்த அணியை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

எவ்வாறாயினும் ராசா,13 பந்துகளில் 17 ரன்கள் தேவை எனும் நிலையில் 49 ஓவரில் நம்பமுடியாத ஷுப்மான் கில் கேட்ச்சில் வீழ்ந்தார், இதனால் போட்டி மீண்டும் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது.

சிகாந்தர் ராசா ஆட்டமிழக்கச் செய்யப்படவில்லை என்றால் இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வங்கதேச அணியுடனான மூன்று போட்டிகளில் இரண்டு சதம் அடித்து இருந்த சிகந்தர் ராசா இன்றும் சதமடித்தார், மொத்தத்தில் அவர் இறுதியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை விளாசி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ ?