இந்தியாவின் முன்னாள் அணித்தலைவரர் மூலமாக சங்கக்காரவிற்கு ஐசிசி யால் கிடைத்த அதி உயர் கௌரவம் …!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் வர்ணனையாளர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி டெஸ்ட் துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவிற்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவை அதி உயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சுனில் கவாஸ்கர், ஐசிசி யால் வழங்கப்பட்ட அதி உயர்மட்ட கௌரவமான Hall of Fame நினைவுச் சின்னத்தை குமார் சங்ககாரவின் கைகளிலே வழங்கி வைத்திருக்கின்றார்.

கிரிக்கட்டின் உன்னத கௌரவமாக அழைக்கப்படும் Hall of Fame எனும் இந்த உயரிய கவுரவம் கிரிக்கெட்டில் சாதித்து கனவான்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் வழங்கப்படுகின்ற ஒரு கௌரவமாகும்.

அலங்கையிலருந்து அந்த கௌரவத்தைப் பெறும் இரண்டாமவர் சங்க என்பதும் குறிப்பிடத்தக்கது, முதலாமவராக முத்தையா முரளிதரன் இந்த விருதுக்கு சொந்தக்கார்ராகியிருந்தார் என்பதும் முக்கியமானது.