இந்தியாவின் 4ம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக உள் நுழைந்தவருக்கு வந்த சோதனை- வாழ்நாள் தடை விதிப்பு..!

இந்தியாவின் 4ம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக உள் நுழைந்தவருக்கு வந்த சோதனை- வாழ்நாள் தடை விதிப்பு..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் போது ஒரு ருசிகர சம்பவம் பதிவானது.

69ஆம் இலக்க சீருடை அணிந்து Jarvo எனப்படும் ரசிகர் இந்திய சீருடையில் ஹெல்மெட்,பாட், பேட் எல்லாம் அணிந்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தார்.

ரோகித் சர்மா அவுட்டாகி ,அடுத்து 4 ம் இலக்கத்தில் கோலி ஆடுகளம் நுழைய முற்பட்ட அந்த தருணத்திலேயே கோலிக்கு பதிலாக திடீரென மைதானத்துக்குள் நுழைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

 இப்போது இந்த மாதிரியான ரகளைகளில் ஈடுபட்ட காரணத்தால் லீட்ஸ் மைதானத்தில் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகளை பார்வையிடுவதற்கு இவருக்கு வாழ்நாள் தடை விதித்திருப்பதாக அந்த கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இவர் முறைகேடாக மைதானத்திற்குள் இரண்டு தடவை நுழைந்திருந்தார்.

ஏற்கனவே இந்தியா பீல்டிங் மேற்கொண்டிருந்த போது இந்திய சீருடையோடு நுழைந்த இவர், பின்னர் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தபோதும் நுழைந்தார் .

ஆகவே இந்த அவதூறு நடவடிக்கைக்காக ஜர்வோ எனப்படும் இந்த ரசிகருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக உள்நுளைந்து இப்போது வாழ்நாள் தடையை அனுபவித்திருக்கிறார் ஜர்வோ ?