இந்தியாவிற்கு இங்கிலாந்தில் விக்கெட் காப்பாளராக போகும் தினேஷ் கார்த்திக் வைரலாகும் டுவிட்டர்…!

இந்தியாவிற்கு இங்கிலாந்தில் விக்கெட் காப்பாளராக போகும் தினேஷ் கார்த்திக் வைரலாகும் டுவிட்டர்…!

இஙலகிலாந்து சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு முனலனர் 20ஆம் திகதி இந்திய அணி இங்கிலாந்து பதினொருவர் அணியை பயிற்சி போட்டிகளில் சந்திக்கப் போகிறது, இதற்கு முன்னதாக இந்தியாவின் விக்கெட் காப்பாளர் பான்ட் கொரோனா தொற்றுக்கு ஆளானார் எனும் செய்தி இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் அதேபோன்று இன்னுமொரு விக்கெட் காப்பாளர் சஹா ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பயிற்சிப் போட்டியில் இந்தியாவின் விக்கெட் காப்பாளர் யார் எனும் கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.

இதனால் இங்கிலாந்து மண்ணில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக்கின் ஒரு  ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் அளவிலேயே வைரலாகி இருக்கிறது.

தினேஷ் கார்த்திக் இதுவரைக்கும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை, இதே நேரத்தில் அவர் தன்னுடைய கிரிக்கெட் சார்ந்த Cricket Kit அதன்மேல் விக்கெட் கீப்பிங் செய்யும் Gloves ஆகியவற்றை வைத்து ஒரு
படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார் .

#JustSaying என்று ஒரு ஒரு பதிவை இட்டிருக்கிறார், அதாவது நான் இன்னும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை மறைமுகமாக தினேஷ் கார்த்திக் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணத்தால் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விக்கெட் காப்பாளராக இங்கிலாந்தில் இருக்கும் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.