இந்தியாவிற்கு எதிராக அதிக சதங்கள் விளாசியோர் பட்டியல் -தொடர்ந்தும் அசத்தும் ரூட்..!

இந்தியாவிற்கு எதிராக அதிக சதங்கள் விளாசியோர் பட்டியல் -தொடர்ந்தும் அசத்தும் ரூட்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஹெடிங்லே லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் அசத்தல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டில் அவரது 6 வது சதமாக இந்த சதம் அமைந்துள்ளது, இது மாத்திரமல்லாமல் இந்தியாவுக்கு எதிராக இந்த ஆண்டில் அடிக்கும் நான்காவது சதமாகவும் இந்த சதம் பதியப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் பெற்றுக்கொண்டு அதிக சதம் எனும் சாதனைப் பட்டியலிலும் ரூட் இடம்பிடித்தார்.

இன்றைய போட்டியில் ஜோ ரூட் அடித்த சதம் இந்தியாவுக்கு எதிரான எட்டாவது சதமாக பதியப்பட்டுள்ளது

இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்:

ஜோ ரூட் – 8*.
ஸ்டீவன் ஸ்மித் – 8.
விவ் ரிச்சர்ட்ஸ் – 8.
கேரி சோபர்ஸ் – 8.
ரிக்கி பொண்டிங் – 8.