இந்தியாவிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்- ஜடேஜா மருத்துவமனையில் ..!

இந்தியாவிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்- ஜடேஜா மருத்துவமனையில் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய 32 வயதான சகலதுறை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா நேற்றைய டெஸ்ட் போட்டிக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

லீட்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது களத்தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த போது ,ஜடேஜா கணுக்காலில் உபாதைக்குள்ளானார், ஆயினும் 2 வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட வந்து 30 ஓட்டங்களை மிகச்சிறப்பாக பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட உபாதை பாரதூரமானதா என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை, ஸ்கான் அறிக்கையின் பின்னரே தகவல்களை எதிர்பார்கலாம்.

தனது இன்ஸ்டகிராமில் ‘Not a good place to be at ?? என பதிவிட்டுள்ளார்.